Daily Thanthi
அரசு மருத்துவமனையில் உதவுவது போல் நடித்து நகை அபேஸ்... நர்சு கைது!
ராயபுரம், ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண்ணுக்கு உதவுவதுபோல் நடித்து சுமார் 2.25 பவுன் நகையை 'அபேஸ்' செய்த நர்சு கைதானார். நகையுடன் மாயம் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 50). கடந்த ஜூன் 6-ந்தேதி கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு தெரிந்த மதுபாலா என்பவரின் அக்கா ஜோதி (32…