சங்ககிரி: சத்யா நகரில் லாரி ஓட்டுநர் வீட்டில் 23 பவுன் தங்க நகைகள் திருட்டு
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சத்யா நகரில் லாரி ஓட்டுநர் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனர். இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சங்ககிரியை அடுத்த சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் குப்புசாமி மகன் பழனிவேல் (47). அவர் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி…