திருவனந்தபுரம் அருகே வீட்டுக்குள் பிணமாக கிடந்த கல்லூரி பேராசிரியை- போலீசார் விசாரணை
திருவனந்தபுரம் அருகே தனியாக வசித்து வந்த கல்லூரி பேராசிரியை பூர்ணிமா பிரகாஷ் வீட்டுக்குள் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளம் மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் பூர்ணிமா பிரகாஷ்(வயது45). இவர் பல்கலைக்கழக கல்லூரியில் தத்துவவியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். பூர்ணிமாவுக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை…