Nakkheeran
’பி.எம்.டபிள்யூ காரை பரிசாக பெற்ற 9 ஆம் வகுப்பு மாணவன்’; வாக்குறுதியை நிறைவேற்றிய தந்தை!
தேர்வில் மகன் நல்ல மதிப்பெண் பெற்றதைத் தொடர்ந்து, அவரது தந்தை விலைமதிப்பு மிக்க சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேற்குவங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கல்சி பகுதியை அடுத்த பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா. இவரது 15 வயது மகன் முகமது தல்ஹா, அப்பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். முன்னதாக, அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் ஆடம்பரக் கார் வாங்கித் தருவதாகத் தனது மகனிடம் ஷம்சுதீன் மித்யா வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, மகன் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதைத் தொடர்ந்…