தவெகவிற்குள் தொடர்ந்து எழும் பெண்களுக்கு எதிரான சீண்டல்கள்: முதல்வர் விஜய் கண்டு கொள்வாரா?- வானதி சீனிவாசன்
கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி என்பவர், தவெக பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும். மேலும் கொலை மிரட்டல் மற்றும் சாதி வன்கொடுமை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டு, தவெக அரசு தமிழகப் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப் போகிறது என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.