Indian Express Tamil
இந்தியர்கள் கட்டிய பாலம்.. ஆங்கிலேயர் பெயர்; பாம்பனில் வெடிக்கும் புதிய சர்ச்சை
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் மற்றும் பாம்பன் இடையே கடலில் அமைந்துள்ள பழைய பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் தீவின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கடந்த 1914ஆம் ஆண்டு இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு ரயில் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. கடலுக்கு நடுவே அமைக்கப்பட்ட இந்தப் பாலத்தின் மையப்பகுதியில், கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாகத் திறந்து மூடும் வகையில் தூக்குப் பாலம் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தின் முக்கிய சாதனையாகக் கருதப்பட்ட இந்தப் பாலம், பல ஆண்டுகளாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் பயணிகளுக்கு முக்கிய போக்குவரத்து வழியா…