Hindu Tamil Thisai
“ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம்” - அமைச்சர் ராஜீவ் பேச்சால் சர்ச்சை
திருப்பூர்: “ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம்” என்று தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் ராஜீவ் கொடுத்த விளக்கம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முன்னதாக நேற்று திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை அமைச்சர் ராஜீவ் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மழைக் காலங்களில் மட்டும் ஆற்றில் தண்ணீர்…