Daily Thanthi
ராணிப்பேட்டையில் மாயமான 1 வயது குழந்தை 35 நாட்களுக்குப் பின் ஆந்திராவில் மீட்பு
ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட 1 வயது பெண் குழந்தை மகேஸ்வரி, 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையம் அருகே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மாயமான குழந்தை ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர்-பிரேமா தம்பதியரின் 1 வயது பெண் குழந்தை மகேஸ்வரி. கடந்த மாதம் 24-ம் தேதி இரவு…