Indian Express Tamil
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்காக; 8 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வசதியான பயணத்தை உறுதி செய்யவும் பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் 8 சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் சென்ட்ரல் – தாம்பரம் சிறப்பு ரயில் (எண்: 06110): புதன்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில் சேவை, நவம்பர் 4, 2026 முதல் நவம்பர் 11, 2026 வரை மேலும் 2 நடைப்பயணங்களுக்கு (Trips) நீட்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06109): வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில் சேவை, நவம்பர் 5, 2026 முதல் நவம்பர் 12, 2026 வரை 2 நடைப்பயணங்கள…