Daily Thanthi
கந்த சஷ்டி விழா: தமிழக மக்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
சென்னை, கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருநாளை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதில் தெரிவித்திருப்பதாவது:- கந்த சஷ்டி அறம், பக்தி, வீரம், ஞானம் ஆகியவற்றின் திருவுருவமாக விளங்கும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அவதாரத் திருநாளான இனிய கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத்…