Indian Express Tamil
'சீதா ராம், சீதா ராம் என பிரார்த்தனை செஞ்சேன்': ஃபைனலில் சம்பவம் செய்த ஆர்யவீர் தந்தை சேவாக்கிடம் சொன்ன சுவாரசியம் - வீடியோ!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை போட்டிகள் வளைகுடா நாடான ஓமனில் நடைபெற்றது. இத்தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உஸ்மான் கான் சதம் விளாசி 107 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 338 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, கடைசி பந்தில் 339 ரன்கள் எடுத்து 9 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது. கேப்டன் லக்ஷ்யா ராய்ச்சந்தனி 80 ரன்களும், ஆர்யவீர் சேவாக் 58 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பிய நிலைய…