Nakkheeran
“இது ஜோதிடர்களின் வேலை” - நீதிபதி பேச்சுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்!
பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும் என்று நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் பதிப்பகம் சார்பில், ‘மகா பெரியவா’ நூல் வெளியீட்டு விழா, சென்னை, மயிலாப்பூரில் உள்ள, பாரதீய வித்யா பவன் அரங்கில் கடந்த 11ஆம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கடந்த இரண்டு நாட்களாக நான் அடைந்த வேதனையை வெளியில் சொல்ல முடியாது. 2024ஆம் ஆண்டு நீதிபதி மகாதேவனுடன் இணைந்து நான் த…