Samayam Tamil
குபேர யோகம் 2026: செல்வம், புகழ் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறும் ராசிகள்
இந்து சமயத்தில் செல்வம், புகழ், தன தான்யம் தரக்கூடிய தெய்வமாக குபேரனை ஆராதிக்கப்பட்டு வருகிறது. இவர் தேவர்களின் கருவூலப் பொறுப்பாளராகவும், யட்சர்களின் மன்னராகவும் போற்றப்படுகிறார். அதனால் ஒருவருக்கு செல்வ வளம் வேண்டுமெனில் லட்சுமி தேவி மற்றும் விநாயகருடன் சேர்ந்து குபேரனை வழிபடுவதன் மூலம் அனைத்து வகையான செல்வங்களும் சேரும் என நம்பப்படுகிறது. அந்த விதத்தில் குபேரனின் அருள் நிறைந்த ராசிகள் என சிலராசிகளைக் குறிப்பிடப்படுகின்றன. எந்த விதத்தில் அவர்களுக்கு குபேரனின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.