உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்; ஒரே நாளில் 14 டிஎஸ்பிகள் இடமாற்றம்

தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, காவல்துறையில் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதிலும் காவல்துறையின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மூன்று நாட்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனைகளில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், குற்றச்செயல்களைத் தடுப்பது, உளவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வே…