Indian Express Tamil
அர்னாப் புயலால் ஏனாமில் கடும் சேதம்; அறிக்கை வந்த பின் நிவாரணம் அறிவிக்கப்படும்; புதுச்சேரி முதல்வர் உறுதி
புதுச்சேரி ஏனாமில் புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கை வந்த பின் நிவாரணம் குறித்த நடவடிக்கை எடுத்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல், புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கியது. கரையைக் கடக்கும் போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் ஏனாம் பகுதி கடும் பாதிப்படைந்து உள்ளது. ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. புயல் காரணமாக ஏனாமில் அதி கனமழை பெய்தத…