வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! சூறாவளியாக வலுப்பெற வாய்ப்பு
இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (16) மாலை சூறாவளியாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (15) இரவு 11.30 அளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 640 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலிருந்து விலகி நகர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை வங்காள விரிகுடா...