நவ.17-டிச.20 : சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் கார்த்திகை பெருவிழா..
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் கார்த்திகை பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் காந்திராஜ் மற்றும் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை விழா நடைபெற உள்ள நிலையில் தக்கான்குளம் மலை அடிவாரம், ரோப் கார் நிலையம் மற்றும் மலைக்கோயில் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர்.