Hindu Tamil Thisai
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி?
சென்னை: அந்தமான் அருகே நாளை (அக்.28) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும். தமிழகத்தில் இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில்…