Nakkheeran
‘பொக்கிஷம், பாக்கியம், நன்றிக்கடன்...’ - நயன்தாரா நெகிழ்ச்சி!
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவோடு ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகாசக்தி’ எனும் முன்னோட்டம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில் புராணக் கதைகள், நிகழ் கால காட்சிகள் இடம் பெற்றிருந்தது. பின்பு இம்மாதம் கடந்த 21ஆம் தேதி ‘வேர்ல்ட் ஆஃப் ம…