IBC Tamil
கைதுசெய்யப்பட்ட கிருஷ்ணகுமாரின் நிலை! மனித உரிமைகள் குறித்து ஆழ்ந்த கவலை
இலங்கையில் அரசாங்கம் நினைத்தால் யாரையும் கைது செய்யலாம், தடுத்து வைக்கலாம் என்ற போக்கைப் பயங்கரவாதத் தடைச்சட்டம் உருவாக்கி வைத்துள்ளதாகவும், இதன் காரணமாகவே அச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சமூகச் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெர...