Daily Thanthi
அர்னாப் புயல் தாண்டவம்: பழவேற்காட்டில் கடல் சீற்றத்தால் காணாமல் போன கடற்கரைச் சாலை!
திருவள்ளூர், வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' அதிதீவிரப் புயலின் தாக்கத்தால், பழவேற்காடு - காட்டுப்பள்ளி கடற்கரை சேவை சாலை முழுவதும் கடல் மணலால் மூடப்பட்டு, சாலை இருந்த அடையாளமே தெரியாமல் காணாமல் போயுள்ளது. அர்னாப் புயல் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த 'அர்னாப்' அதிதீவிரப் புயல், இன்று (புதன்கிழமை) அதிகாலை ஆந்திரா - ஏனாம் இடையே கரையைக் கடந்தது. இப்புயல் கரையைக் கடந்த சமயத்தில் ஏற்பட்ட கடுமையான கடல் சீற்றம்…