உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பெங்களூரு விமான நிலையத்தில் நவம்பர் 1 முதல் புதிய வசதி;, இனி முகத்தைக் காட்டினால் போதும்

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA), சர்வதேச விமானப் பயணிகளுக்காக முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் டிஜி யாத்ரா (Digi Yatra) சேவையின் சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை உள்நாட்டு விமானப் பயணங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தத் தொழில்நுட்பத்தை, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விமானப் பயணங்களுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனமான (BIAL) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நவம்பர் 1 முதல் இந்தச் சேவை முழுமையாகச் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது டிஜி யாத்ரா பீட்டா செயலி மூலம் சோதனைகள் நட…