Polimer News
''கிராஃபைட்டை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டம்'' - அமைச்சர் பிரபு
மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைப் பயன்பாடுகளுக்கு தேவையான கிராஃபைட் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாக ஆஸ்திரேலியா மற்றும் சீனாவை சேர்ந்த நிறுவனங்களுடன் கலந்தாய்வு நடத்தியதாக அமைச்சர் பிரபு தெரிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் சுமார் 96% தூய்மையுடைய கிராஃபைட் தாதுவை, 99.5% தூய்மையுடைய எலக்ட்ரோடு தர கிராஃபைட்டாக மேம்படுத்தி சுத்திகரித்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளக்கினார்.…