Nakkheeran
சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: மாணவர்கள் மகிழ்ச்சி!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் கல்விச் சேவையைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டப வளாகத்தில் அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுவாமி சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை சார்பில், மணிமண்டப வளாகத்தில் மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையி…