Nakkheeran
‘நேர விரயம்’ லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்த டிரம்ப்: உச்சகட்ட கடுப்பில் ஈரான்
சர்வதேச அரங்கில் அணு ஆயுத சர்ச்சை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதல் போக்கு தற்போது மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானின் முன்னெடுப்பில் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஒரு ‘நேர விரயம்’ என்றும், தனக்கு இதில் ஆரம்பத்திலிருந்தே விருப்பமில்லை என்றும் டிரம்ப் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் அரசு உடனடியாக…