Nakkheeran
மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 19 பேர் அதிரடி இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு!
தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, சென்னை பெருநகர வளர்ச்சி முகமையின் முதன்மைச் செயல் அலுவலராக இருந்த எஸ்.பி. கார்த்திகா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய எஸ். வளர்மதி, வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் இருந்த ஆர். சதீஷ், சேலம் பட்டுவளத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி ஆணையராக இருந்த மோனிகா ராணா தென்காசி மாவட்ட ஆட்சியராகவும், கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சி. முத்துக்குமரன் திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம்…