Indian Express Tamil
நீ வராவிட்டால் கச்சேரியே நடக்காது; மகள் இறந்த துக்கத்தில் இருந்த போது பாட அழைத்த இளையராஜா: மனம் திறந்த கே.எஸ். சித்ரா
இந்திய சினிமாவின் முன்னணி பாடகிகளில் முக்கியமானவர் கே.எஸ்.சித்ரா. தமிழ் சினிமாவில் இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசை மற்றும் எஸ்.பி.பி போன்ற முக்கிய பாடகர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், தனது மகளின் இறப்பால் இசையை விட்டு விலக நினைத்தபோது அவரை வற்புறுத்தி பாட அழைத்து வந்துள்ளார் இளையராஜா. தனது காந்தக் குரலாலும் காலத்தால் அழியாத பாடல்களாலும் நம் வாழ்க்கையை ஒளிமயமாக்கி, நம் வாழ்வின் இருண்ட நாட்களில் கூட நமக்கு ஆறுதல் அளித்த ஒரு புகழ்பெற்ற பாடகி தான் கே.எஸ். சித்ரா. ஆனால், தனது செல்ல மகளின் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சித்ரா மற்றும் அவரது கணவர் விஜய்…