உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : சகோதரியின் மகன் கைது!

தூத்துக்குடி கந்தன் காலனியில் சசிகலா என்ற பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டில் இருந்த நான்கு சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, நகைக்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அவ்வாறு தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சசிகலாவின் உடன்பிறந்த சகோதரியின் மகனான விக்னேஷ் முனீஸ…