Nakkheeran
ஆதிதிராவிட மகாஜன சங்க சொத்துகளை விற்பனை செய்ய எதிர்ப்பு: விசிக எம்எல்ஏவை கண்டித்து போராட்டம் அறிவிப்பு!
மறைந்த ஐயா இளையபெருமாளால் ஆதிதிராவிட மக்களின் சமூக வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் சொத்துகளை, காட்டுமன்னார்கோவில் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது பெயருக்கு மாற்றி விற்பனை செய்ய முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பட்டியல் சமூகத்தினர் மற்றும் ஆதிதிராவிட மகாஜன சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், விற்பனை நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக்…