காலியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை: நண்பர் தலைமறைவு
காலியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் காலி – ஹிக்கடுவைப் பகுதியில் நேற்று (19-11-2026) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். நீண்ட கால முரண்பாடு இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த இளைஞனுக்கும் அவரது நண்பரான 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது.