உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

காலை 5 மணிக்குக் கதவைத் தட்டி காரில் ஏற்றிச் சென்றனர்: போலி இன்ஸ்டாகிராம் பதிவு விவகாரத்தில் போலீசார் துன்புறுத்தியதாக பேராசிரியர் புகார்

தனது போட்டோவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து த.வெ.க எம்.எல்.ஏ. குறித்து அவதூறான கருத்து பதிவிடப்பட்டதாகக் கூறி, அதிகாலையில் வீட்டுக்கு வந்து தன்னை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தடுத்து வைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் கலையரசன், தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் கலையரசன் தமிழக டி.ஜி.பி-க்கு எழுதியுள்ள கடிதத்தில், என் பெயர் கலையரசன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.…