உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“இதுவா சமூகநீதி? தவெக இப்படிப்பட்ட சமூக அநீதியை மேற்கொள்வது நியாயமா?” - அன்புமணி ஆவேசம்!

அவுட்சோர்சிங் பணியாளர்கள் நியமனம் விரிவாக்க விவகாரத்தில் சமூகநீதியை காப்பதற்குபதில் அரசே காவு கொடுக்கக்கூடாது என தவெக அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு குத்தகை (அவுட்சோர்சிங்) முறையில் பணியாளர்களை வழங்குவதற்கான நிறுவனமாக வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷனை (Overseas Manpower Corporation Limited) நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசுத்துறைகளில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதற்கான அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.…