Indian Express Tamil
மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய 13 மரணங்கள்: ஏ.ஐ. உதவியுடன் கள்ளச் சாராயம் தயாரித்த மாஸ்டர் மைண்ட் சிக்கியது எப்படி?
Anand Mohan J செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கிடைத்த அரைகுறைத் தகவல்களை வைத்துக்கொண்டு, மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போலி மதுபானத் தயாரிப்பு ஆலையை நடத்திய 26 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தயாரித்த விஷச்சாராயம் காரணமாக அந்தப் பகுதியில் 13 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் சந்தனா மற்றும் பிஞ்சானா கிராமங்களில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதிக்குப் பிறகு அடுத்தடுத்து 13 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் இந்த உயிரிழப்புகளுக்கும் கள்ளச்சாராயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்ல…