Nakkheeran
அன்பில் மகேஷ் வழக்கில் திடீர் ட்விஸ்ட்; தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ சரண்!
கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளி அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழை பெறவும் தனியார் பள்ளிகளிடம் சுமார் லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து, தனியார் பள்ளி சங்கத் தலைவராக இருந்த பி.டி அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா ஆகியோர் மீது ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி அளவில் பண மோசடி செய்ததாகவும், இதில் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ…