Daily Thanthi
தேனி சிறையில் கைதிகள் தப்பிக்க யார் காரணம்? - தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதரி விளக்கம்
தேனி, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் கடந்த 26-ந்தேதி இரவு சிறை காவலர்களை தாக்கிவிட்டு, 17 கைதிகள் நுழைவு வாயில் வழியாக தப்பி ஓடினர். கைதிகள் தாக்கியதில் 3 காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கைதிகள் யார் யார்? இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தப்பி ஓடியவர்கள் தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த…