Polimer News
வனத்துறையினரிடம் நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைத்த மக்கள்..
தருமபுரி மாவட்டத்தில், உரிமம் பெறாமல் வைத்திருந்த 44 நாட்டுத் துப்பாக்கிகளை பொதுமக்கள் தாமாக முன்வந்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. வனவிலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதை தடுக்கும் நோக்கில், வனத்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வை தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கிகளை மக்கள் ஒப்படைத்துள்ளனர்.