Indian Express Tamil
முதல்வருக்காக காலையில் இருந்து இரவு வரை ரிப்பன் பில்டிங்லயேவா இருக்க முடியும்; மேயர் பிரியா ஆவேசம்
முதலமைச்சர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், வெளியில் முதலமைச்சரின் கூட்டத்தை புறக்கணிப்பதாக செய்திகள் வருகிறது என மாமன்றக் கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளுக்கு கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போது பேசிய துணை மேயர் மகேஸ் குமார், “சைதாப்பேட்டை தொகுதியில் ஒரு பூங்கா புனரமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா…