Indian Express Tamil
மெத்தையில் வினிகர் தெளிச்சா என்ன ஆகும்? நாற்றம் போகும்... ஆனா இந்த விஷயத்தை மறந்துடாதீங்க!
வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதில் தரை, சமையலறை, குளியலறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும், தினமும் பல மணி நேரம் பயன்படுத்தும் மெத்தையைச் சுத்தம் செய்வதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. நாளடைவில் மெத்தையில் வியர்வை நாற்றம், ஈரப்பதத்தால் ஏற்படும் வாசனை, தூசி மற்றும் சிறிய கறைகள் படிய வாய்ப்புள்ளது. இதனால் படுக்கையறையில் துர்நாற்றம் வீசுவதுடன், தூங்கும்போதும் அசௌகரியம் ஏற்படலாம். இத்தகைய சூழலில், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் வெள்ளை வினிகரைத் தண்ணீரில் கலந்து மெத்தையில் லேசாகத் தெளிப்பது ஒரு எளிய சுத்தப்படுத்தும் முறையாகக் கருதப்படுகிறது. மெத்தையில் வினிகர் தெளிப்பதால் கிடைக்கும் நன்…