Vikatan
பெரம்பலூர்: வயதான பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு; 15 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புது வேட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. வயதான இவர், ஆடு, மாடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். இந்நிலையில், புது வேட்டக்குடி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பாப்பாத்தியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பாப்பாத்தி அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் சிலர்…