உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ரூ 400 கோடி லஞ்ச புகார் வழக்கு - அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா?

400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமின் மனுவிற்கு பதில் அளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் வழங்க 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஜாமின் மனுவிற்கு பதில் அளிக்க கால அவகா…