Polimer News
தமிழக வானிலையில் மாற்றம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை?
தமிழகத்தில் வரும் நாட்களில் சில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், வட தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி வரை பகல்நேர வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசான மழைக்கு வாய்ப்பு இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை வரும் 31ஆம் தேதி வரை வட தமிழகத…