Indian Express Tamil
என்னடா இது! ரயில்வே நிர்வாகத்துக்கு வந்த சோதன... ரூ.1 குறைவாக ரீஃபண்ட் அனுப்பி ரூ.3,100 தண்டம் கட்டிய ஐ.ஆர்.சி.டி.சி
ரயில் டிக்கெட்டை ரத்து செய்தபோது, திரும்ப வழங்க வேண்டிய தொகையில் ஒரு ரூபாய் குறைவாக வழங்கப்பட்ட விவகாரத்தில், கேரள பயணிக்கு அந்த ஒரு ரூபாயைத் திருப்பித் தருமாறு இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமான ஐ.ஆர்.சி.டி.சி-க்கு (IRCTC) நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பயணிக்கு ரூ.3,100 இழப்பீடு வழங்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு ரூபாய்க்காக நுகர்வோர் ஆணையத்தை நாடிய பயணி கேரள மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், ஆகஸ்ட் 20-ஆம் தேதி மேற்கொள்ளவிருந்த பயணத்திற்காக, ஆகஸ்ட் 11, 2024 அன்று 553 ரூபாய்க்கு ஏசி த்ரீ-டயர் (AC three-tier) ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளார்.…