Indian Express Tamil
செங்கல்பட்டு கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு; ஐஐடி-மெட்ராஸ் சார்பில் 3 சுத்திகரிப்பு நிலையங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் வல்லிபுரம் கிராமத்தில் பருவமழைக் காலங்களில் மாதந்தோறும் சுமார் 10 பேருக்கு நீர்வழி நோய்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான நூலகம் அமைப்பது மற்றும் கணினிப் பயிற்சி வழங்குவது தொடர்பாக ஐஐடி-மெட்ராஸ் பேராசிரியர்கள் கிராம மக்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். அப்போது, தங்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஐஐடி-மெட்ராஸின் நீர் மேலாண்மை மற்றும் கொள்கைக்கான அக்வாமேப் மையம் (AquaMAP Centre for Water Management and Policy), மூன்று இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை…