Daily Thanthi
மொபைல் உற்பத்தி மூலமாக மத்திய அரசுக்கு ரூ.3.25 லட்சம் கோடி வரி வருவாய்
புதுடெல்லி, மொபைல் போன் உற்பத்திக்கான 'பி.எல்.ஐ.' எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 19,000 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அரசுக்கு 3.25 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலக சந்தைக்கு ஏற்றுமதி இந்தியா தனது உள்நாட்டுத் தேவைக்கான மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய உதிரிபாகங்களுக்கு பிற நாடுகளையே முழுமையாகச் சார்ந்திருந்தது. ஆனால், 'மேக் இன் இந்தியா…