உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு : மன்னிப்பு கோரிய தி.மு.க. கவுன்சிலர் சுதா!

சென்னையில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய பெண் நிர்வாகியும் சென்னை கவுன்சிலருமான சுதா தீனதயாளன், முதல்வர் விஜய் குறித்துத் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில், த.வெ.க. துறைமுக பகுதி செயலாளர் உதயகுமார் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 07.10.2026 அன்று மாலை ராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்…