Nakkheeran
எம்.எல்.ஏ.வாக இல்லாதபோதும் தொடரும் நற்செயல் - ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தீபாவளி புத்தாடை வழங்கிய தங்கப்பாண்டியன்!
பதவியில் இருப்பதும், இல்லாததும் அரசியலில் இயல்பானது. ஆனால், மக்கள் பிரதிநிதியாக இருக்கும்போது கொண்ட அக்கறையும், மக்களுக்குச் செய்யும் உதவிகளும் பதவிக்காலம் முடிவடைந்த பிறகும் நின்றுவிட வேண்டுமா என்ன? ராஜபாளையம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனின் தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்வு, அரசியல் பதவிக்கு அப்பாற்பட்ட மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தங்கப்பாண்டியன், தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. ஆனாலும், ஆண்டுதோறும் தீபாவளியின்போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கும் தனது வழக்கத்தை இந்த ஆ…