உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சிறுமி காணாமல் போன வழக்கு : சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11ஆம் தேதி (11.10.206) இரவு தங்களது 7 வயது மகளுடன் பெற்றோர் வீட்டில் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை (12.10.2026) அவர்கள் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சிறுமியை மீட்பதற்காக 3 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி தனிப்படையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய…