Daily Thanthi
சவுதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்
ரியாத், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஏமனின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்…