உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இடஒதுக்கீடு தேவை'-அன்புமணி வலியுறுத்தல்

'மருத்துவ மாணவர் சேர்க்கையில் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% இடஒதுக்கீடு தேவை' என பாமகவின் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.50% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களுக்கான சமூகநீதி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில் வேறு வழியின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அடித்தட்டு ஏழை மாணவர்களுக்கு அதே சமூகநீதி மறுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களின் சமூக, பொருளாதாரச் சூழல்கள் கிட்டத்தட்…