Indian Express Tamil
சிங்கின் ஓரங்களில் படியும் பிசுக்கு இனி குறையுமா? இந்தச் சின்ன ட்ரிக்கை முயற்சி செய்து பாருங்க
சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது பலருக்கும் சவாலான வேலையாகவே இருக்கிறது. குறிப்பாக, தினமும் பாத்திரங்களைக் கழுவும் சமையலறை சிங்கின் ஓரங்களில் தண்ணீர், உணவுத் துணுக்குகள், எண்ணெய்ப் பிசுக்கு போன்றவை எளிதில் படிந்துவிடுகின்றன. இதனால் சிங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் அழுக்குகள் தேங்குவதுடன், சில நேரங்களில் துர்நாற்றமும் ஏற்படுகிறது. சிங்கின் மூலை முடுக்குகளில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். இந்நிலையில், வீட்டில் உணவுப் பொருட்களைப் பொட்டலம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் அலுமினியம் ஃபாயிலைச் சமையலறை சுத்தம் செய்யும் பணியிலும் ஒரு தற்காலிகத் த…